உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்துளசி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பட்டத்துளசி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

ராசிபுரம்: ராசிபுரம், சி.பி.கண்ணையா தெருவில் உள்ள பட்டத்துளசி அம்மன் கோவிலில் நடந்த, 48 நாள் மண்டல பூஜை நிறைவு நாளில், ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ராசிபுரம், சி.பி.கண்ணையா தெருவில், பட்டத்துளசி என்கின்ற பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், செப்., 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து, நேற்று நிறைவு விழா நடந்தது. முன்னதாக, பால்குடம் எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். விழாவில், காமாட்சி அம்மன் கோவில் தெரு, பெருமாள் சந்து, கிருஷ்ணன் கோவில் சந்து, ஆசிரியர் காலனி, வள்ளலார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !