திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு டிசம்பரில் பிரம்மோற்சவம்!
ADDED :3689 days ago
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, டிசம்பரில் பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.திருமலையில், ஏழுமலையானுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி, கார்த்திகை மாதம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. டிச., 8ம் தேதி முதல், 16ம் தேதி வரை, ஒன்பது நாட்கள், வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.