உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பசியார் கோவிலில் மிளகாய், தயிர் அபிஷேகம்

தென்பசியார் கோவிலில் மிளகாய், தயிர் அபிஷேகம்

திண்டிவனம் : தென்பசியார் பாலமுருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழாவில் பக்தர்களுக்கு மிளகாய், தயிர் அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், 7 மணிக்கு அக்னி மூட்டுதலும், காலை 10 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் அபிஷேம், தயிர் அபிஷேகமும் நடந்தது. பகல் 1.30 மணிக்கு மஞ்சள் இடித்தலும், தொடர்ந்து செடல் சுற்றுதல், பழம் போடுதல், பால்குடம் எடுத்தல் நடந்தது. மதியம் 3 மணிக்கு காவடி எடுத்தலும், 3.30 மணிக்கு தீ மிதி விழாவும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், 7.30 மணிக்கு இடும்பன் பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !