உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் கோவில்களில் ஆடிக் கிருத்திகை கொண்டாட்டம்

திருக்கோவிலூர் கோவில்களில் ஆடிக் கிருத்திகை கொண்டாட்டம்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பகுதி கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் காவடி, பால்குடம் எடுத்தனர். முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதியுலா துவங்கியது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் மாடவீதி வழியாக அரோகரா கோஷம் முழங்க காவடி எடுத்து வந்தனர். ஊர்வலம் கோவிலை சென்றடைந்தவுடன் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு பால் அபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஆஸ்பிட்டல் ரோடில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். பின்னர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சோடசோபபச்சார தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !