உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபுரம் முன் வாகன அணிவகுப்பு: மருதமலை பக்தர்கள் அதிருப்தி!

ராஜகோபுரம் முன் வாகன அணிவகுப்பு: மருதமலை பக்தர்கள் அதிருப்தி!

வடவள்ளி: மருதமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தின் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். வாகன  நிறுத்தத்தை சீர் படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படும் மருதமலை முருகன் ÷ காவிலில், உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த, பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். கோவிலின் ராஜகோபுரம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்,  புதிதாக நிறுவப்பட்டது. கோவில் வளாகத்தில், மேலே செல்வதற்கு ஒரு வழியும், கீழே இறங்குவதற்கு ஒரு வழியும் தனியாக அமைக்கப் பட்டுள்ளது. வளாகத்திலிருந்து கீழே இறங்கும் பக்தர்கள், ராஜகோபுரத்தை நோக்கி தரையில் சாஷ்டாங்கமாக வணங்குவது வழக்கம். ஆனால், ÷ காவில் வளாகத்தில் ராஜகோபுத்துக்கு முன், வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆகம விதியின்படி, கோவி லின் ராஜகோபுரத்துக்கு முன் எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது.

இதை அறநிலையத்துக்கு உட்பட்ட பெரும்பாலான கோவில்களில் கடைபிடித்து வருகின்றனர். ஆனால், மருதமலை கோவிலில் ‘பார்க்கிங்’  வளாகத்தில் போதிய பராமரிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் இல்லாததால், வாகனங்கள் கோபுரத்துக்கு முன்பே அணிவகுத்து நிற்கின்றன. இதனால்,  பக்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பக்தர்கள் கூறுகையில், ‘மலை மீது செல்லும் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு,  கட்டணம் விதிக்கின்றனர்.  ஆனால், கோவில் வளாகத்தில் பார்க்கிங் ஒழுங்கு படுத்துவதற்கு ஆட்கள் இல்லை. அதேபோல், கட்டணப்பலகையும்  வைக்கப்படவில்லை. மேலும், ராஜகோபுரத்துக்கு முன் வாகனம் நிறுத்துவதால், ராஜகோபுத்தை நோக்கி வணங்க முடிவதில்லை’ என்றனர். கோவில்  நிர்வாகிகள் கூறுகையில்,‘கட்டணப்பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டு, பின்பற்றுகிறார்களா என கண்காணிக்கப்படும்.  வளாகத்தில் பார்க்கிங்  வசதியை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !