உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகலம்

மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதி மாரியம்மன் கோவில்களில், பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோவில்களில், மாவிளக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். திருச்செங்கோடு மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பெண்கள் குழந்தைகளுடன் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அக்னிசட்டி, அலகு குத்தல், புலிவேஷம், கடவுள் வேஷம், பெண் வேடம் என பல வகையாக வேடமிட்டு, பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். நகரின் நான்கு ரத வீதிகளில், கரகாட்ட நிகழ்ச்சியும், சிலம்பாட்டமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !