ஸ்ரீசத்ய சாய் பாபா பிறந்த நாள் நாளை கர்நாடக இசை கச்சேரி
புதுச்சேரி: புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய் பாபாவின் ௯௦வது பிறந்தநாள் கொண்டாடத்தை முன்னிட்டு நாளை ௧ம் தேதி கர்நாடக இசை கச்சேரி நடக்கிறது. புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய் பாபாவின் ௯௦வது பிறந்த நாள் நவ., ௨௩ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீசத்யசாய் சேவா நிறுவனங்கள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை செய்ய உள்ளன. முதல் கட்டமாக நாளை ௧ம் தேதி கர்நாடக இசை கச்சேரி நடக்கிறது. புதுச்சேரி காளதீஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சொசிதே பிராகிரசிஸ்த் பள்ளியில் நாளை (௧ம் தேதி) மாலை ௫.௩௦ மணி முதல் 8:30 மணி வரை பெங்களுருவைச் சேர்ந்த வித்யா மற்றும் அவரது குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி நடக்கிறது. வித்யா மற்றும் ஹர்ஷிதா வாய்ப்பாட்டு, வெதுலா, கிரண் வயலின், ஸ்ரீதர் மிருதங்கம் வாசிக்கின்றனர். இந்த கர்நாடக இசை கச்சேரியில் அனைவரும் பங்கேற்குமாறு புதுச்சேரி ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.