ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3625 days ago
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆருபள்ளி கிராமத்தில், சிதிலமடைந்த நிலையில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நன்கொடைகள் பெறப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊர் நிர்வாகி கேசவரெட்டி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆருப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, தளி பஞ்சாயத்து செயலர் ஆதிநாராயணன் மற்றும் ஆருபள்ளி கிராம மக்கள் செய்திருந்தனர்.