உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

ராசிபுரம்: ராசிபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும், 4ம் தேதி, பொங்கல் விழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மாரியம்மன் கோவில், ஐப்பசி தேர்த்திருவிழா மற்றும் குண்டத்திருவிழா, அக்டோபர், 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு சமூகத்தாரின் மண்டப கட்டளை நிகழ்ச்சி நடந்தது. இன்று, (நவ., 2), இரவு, 12 மணிக்கு பூவோடு பற்ற வைத்தல் நிகழ்ச்சியும், நாளை அதிகாலை பூ வோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு, 8 மணிக்கு மாரியம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடக்கிறது. வரும், 4ம் தேதி அம்மை அழைத்தல், பொங்கல், மாவிளக்கு பூஜை, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் ஆகியன நடக்கிறது. 5ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு தீ மிதிவிழா நடக்கிறது. அன்று மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து, 6ம் தேதி திருத்தேர் நிலை சேருதல், 7ம் தேதி சத்தாபரணம், 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !