மதுரை வீரன் கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED :3625 days ago
கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள நடையனூர் மதுரைவீரன் சாமி கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கடந்த, 48 நாட்களாக தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. இதை தொடர்ந்து, 48ம் நாள் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. இதில், சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.