உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீண்ட காலமாக பராமரிப்பில்லாத காலடிப்பேட்டை கோவில் தேர்!

நீண்ட காலமாக பராமரிப்பில்லாத காலடிப்பேட்டை கோவில் தேர்!

காலடிப்பேட்டை: கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் தேர், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கிறது. 300 ஆண்டுகள் பழமையான, இந்த கோவிலில்,  2007ல் தேர் உற்சவம் நடத்தப்பட்டது. பின், எட்டு ஆண்டுகளாக, கோவில் தேர் பராமரிக்கப்படவில்லை.  மழையிலும், வெயிலிலும் நின்ற தேரின், மரக்கட்டைகள் சேதமடைந்து விட்டன. தேரில் உள்ள வெண்கல மணிகள் காணாமல் போய் விட்டன. கோவிலுக்கு உபயமாக தரப்பட்ட தேரை, கோவில் நிர்வாகம் பராமரிக்காததால், நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் உள்ளோம். கோவில் சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாயை பயன்படுத்தி, தேரை பராமரித்து இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !