மோகாம்பரி அம்மன் கோவிலில் பாலாயணம்!
ADDED :3624 days ago
விருத்தாசலம்: மோகாம்பரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்குவதை முன்னிட்டு, பாலாயணம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலின் உபகோவிலான தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணி துவங்குவதையொட்டி பாலாயணம் நடந்தது. 2ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோ பூஜையுடன் சுவாமி சிலைகள் பாலாயணம் செய்யப்பட்டு, கோபுர கலசத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.