உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல ஆத்மாக்களின் தினம் கல்லறைகளில் பிரார்த்தனை!

கல ஆத்மாக்களின் தினம் கல்லறைகளில் பிரார்த்தனை!

கோவை : உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கல்லறை தினமாகவும், சகல ஆத்துமாக்களின்(ஆல் சோல்ஸ் டே) தினமாகவும் நேற்று அனுசரித்தனர். கோவையில் கிறிஸ்தவர்கள், மரித்த தங்கள் உறவினர்களின் கல்லறைகளுக்கு அதிகாலையிலிருந்து இரவு வரை சென்று, கல்லறை முழுவதையும் சுத்தமாக கழுவி, மலர்மாலைகளால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி வைத்து பிரார்த்தனை செய்தனர். குனியமுத்துார், கோவைப்புதுார், போத்தனுார், சுங்கம், அத்திப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களிலுள்ள, ரோமன் கத்தோலிக்க, பிராட்டஸ்டன்டு, லுத்தரன் உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சபை மக்களும் மாலையில் அந்தந்த கல்லறைகளுக்கு சென்று பொதுவான சிறப்பு வழிபாடு நடத்தினர். குறிப்பாக, சுங்கம் ரோமன் கத்தோலிக்க சபையின் கல்லறையில் காலை 11.00 மணிக்கு கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ்லாஸ் தலைமையில் பாதிரியார்கள் பலரும் சேர்ந்து வழிபாடு நடத்தினர். மாலை 5.30 மணிக்கு கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !