திருச்சானூர் பத்மசரோவரம் திருக்குளம் மூடல்!
ADDED :3738 days ago
திருப்பதி: திருப்பதி, திருச்சானுாரில் உள்ள பத்மசரோவரம் திருக்குளம் மூடப்பட்டது. திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, டிச., 8 முதல், 16 வரை, பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. பத்மாவதி தாயார், தாமரை பூவின் மீது அவதரித்த பத்மசரோவரம் திருக்குளத்தில், அவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று பஞ்சமி தீர்த்தம் நடக்கும். இதற்காக, திருக்குளம் மூடப்பட்டு, அசுத்த நீர் வெளியேற்றப்பட்டது.தற்போது குளத்தின் அடியில் படிந்துள்ள பாசியை நீக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், குளத்தை சுத்தம் செய்து, புதிய தண்ணீரை நிரப்ப, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.