வெள்ளையானந்த சுவாமிக்கு கருமாரப்பட்டியில் குரு பூஜை
அவலூர்பேட்டை: கருமாரப்பட்டி கிராமத்தில் வெள்ளையானந்த சுவாமிகளின் மூன்றாம் ஆண்டு குரு பூஜை ஆராதனை, மகோற்சவம் நடந்தது.அவலூர்பேட்டை அடுத்த கருமாரப்பட்டியில் வெள்ளையானந்த சுவாமிகள், தொடர்ந்து 15 ஆண்டுக ளாக உண்ணாமலும், 47 ஆண்டுகள் அமர்ந்தபடி தவ சிந்தனையுடன் நிஷ் டையிலிருந்து சிவனருள் பெற்றவர். ஜீவ சமாதி அடைந்து சிவலிங்க வடிவமாக உள்ள சுவாமிக்கு, மூன்றாம் ஆண்டு குருபூஜை ஆராதனையும், மகோற்சவமும் கருமாரப்பட்டியில் நடந்தது. இதை முன்னிட்டு, 2ம் தேதி காலை 9:00 மணிக்கு விழா துவங்கியது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜை , திருவடி புகழ் நிகழ்ச்சிகளுடன் சன்மார்க்க கொடி ஏற்றம் நடந்தது. தொடர்ந்து 5 :30 மணிக்கு விக்ன விநாயகருக்கு பூஜை புண்யகவாசனம், தன பூஜை, சப்தரிசி கலச ஸ்தாபனம், ஹோமம், மகா பூர்ணாஹூதி, விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அஷ்டோத்திர சத நாம அர்ச்சனை, அன்னப்பெரும் படையல், சாதுக்கள் மஹேஸ்வர பூஜை , மகா தீபாரதனை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலையில் சிறப்பு சொற்பொழிவும், இரவு சுவாமி வீதி உலாவும் நடந்தன. இதில் மும்பை, சென்னை, பெங்களூரு,புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், கிராம மக் கள் திரளாக கலந்துக் கொண்டனர்.