உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி முத்துமாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்!

பொள்ளாச்சி முத்துமாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கப்பளாங்கரை முத்துமாரியம்மன் கோவில், திருவிழாவில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.  பொள்ளாச்சி கப்பளாங்கரை முத்து மாரியம்மன் கோவிலில், முத்து மாரியம்மன் திருக்கல்யாணம், முதலாம் ஆண்டு நோன்பு திருவிழா கடந்த 26ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.  கடந்த 27ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும்; நேற்றுமுன்தினம் கம்பம் இடுதல் நிகழ்ச்சியும் நடந்தது.  இன்று காலை, 5:00 முதல் 6:00 மணி வரை திருக்கல்யாணம், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும்; இரவு 7:00 முதல் 10:00 மணிக்குள் கம்பம் விசர்ஜனம் செய்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !