கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி
ADDED :3962 days ago
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. செங்கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, சிறப்பு அலங்காரத்துடன் ஏகாந்த சேவை நடந்தது. அனுக்ரக பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.