வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :3629 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதைச்சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. சன்னதியில் உள்ள துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. ஐப்பசி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையான, நேற்றுமுன்தினம் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.