மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3630 days ago
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த சிறுமுளை மகா மாரியம்மன் கோவிலில் நாடு நலம் பெற வேண்டி ஆதிபராசக்தி வார வழிபாட்டுமன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. வட்டத் தலைவர்கள் செல்வம், ராதாகிருஷ்ணன், மன்ற தலைவர்கள் சங்கீதா பாரதிதாசன், சிவக்குமார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு முறைப்படி பூஜைகளை நடத்தி வைத்தனர். சிறுமுளை, பெருமுளை உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 150 சுமங்கலிப் பெண்கள் பூஜையில் பங்கேற்று தமிழ் மந்திரங்களைப்பாடி, குங்குமம், மலர் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை தங்கராசு, ஜெயசித்ரா, இளையராணி, சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.