திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 16 பேர் மாற்றம்
ADDED :3685 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், 16 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல அதிகாரிகள், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு, முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ், ஏழு ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த, 16 அதிகாரிகளை வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்துள்ளார்.