தேவிபட்டினம் நவபாஷாண நடைபாதை சேதம்: பக்தர்கள் அவதி!
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷன நடைபாதையில் உள்ள டைல்ஸ் கற்கள் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தேவிபட்டினத்தில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுசெய்யப்பட்ட நவகிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதற்கும், ஏவல், பில்லி, சூணியம், திருமண தடை உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மேலும் இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்து வருவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.ஆடி,தை, அமாவாசை தினங்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷன நவகிரம் அமைந்துள்ள நடைமேடையில் உள்ள டைல்ஸ் கற்கள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளன.சேதமடைந்த டைல்ஸ் கற்கள் பக்தர்களின் கால்களை பதம்பார்த்து வருவதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.எனவே சம்மந்தபட்ட நிர்வாகம் சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.