கோட்டை பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவம்!
ADDED :3969 days ago
சேலம்: சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நடந்து வரும் திருபவித்ர உற்சவத்தையொட்டி, சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. திருபவித்ர உற்சவத்தையொட்டி, பவித்ர மாலைகளுடன், சிங்கமுக ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.