மலைவாழ் மக்களுக்கு பேரூர் ஆதினம் உதவி
ADDED :3638 days ago
கோவை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், 91வது பிறந்தநாளை முன்னிட்டு மலைவாழ் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், 91வது பிறந்த நாளை முன்னிட்டு, மரகத விழா நடந்தது. அப்போது,மக்கள் யாரும் எனக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டாம், மாறாக ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்தார். தொடர்ந்து, பேரூர் ஆதினம் சார்பில், ஏழை மக்களுக்கு ஆடைகளை வழங்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் கோவை குற்றாலம் பகுதியில் உள்ள சிங்கப்பதி, வெள்ளப்பதி உள்ளிட்ட மழைவாழ் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள, 400க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன. மருதாசல அடிகளார் ஆடைகளை வழங்கினார்.