உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் கருமாரியம்மன் கோவிலில் திருநாம ஜபம்!

சிறுகடம்பூர் கருமாரியம்மன் கோவிலில் திருநாம ஜபம்!

செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் அன்னை பவதாரினி நகர், கருமாரியம்மன் கோவிலில் பகவான் யோகிராமம் சுரத்குமாரின் திருநாம ஜபம் நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர்,  ஸ்ரீ அன்னை ஓம் பவதாரிணி நகர் சித்தாஸ்ரமத்தில் உள்ள கருமாரியம்மன் மற்றும் காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று பகவான் யோகிராம் சுரத்குமாரின் திருநாம ஜபம் நடந்தது.  அன்னை ஓம் பவதாரிணி முன்னிலையில் மதுரை மாசானமுத்து பஜனை குழுவினர், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை திருநாம பஜனையை நடத்தினர். தொடர்ந்து நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் பஜனை நடந்தது. யோகிராம் சுரத்குமாரின் திருவடிகளுக்கு மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது. இதில் புதுச்சேரி தொழிலதிபர் பிரேம்குமார், குமுதினி, செஞ்சி மணியம்மாள், ஸ்வேத பத்மாசனி மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் உமா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !