உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொடக்குறிச்சி சித்தி விநாயகர் கோவில் பூஜை

மொடக்குறிச்சி சித்தி விநாயகர் கோவில் பூஜை

மொடக்குறிச்சி: கணபதிபாளையம் சித்தி விநாயகர் கோவிலில் நடந்த பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்ததுடன், யானைகளில் சென்று காவிரி நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்பட்டது. கணபதி பாளையம் நால்ரோட்டில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 48 நாட்களாக மக்கள் விரதமிருந்து கஜ, அஸ்வ,கோ பூஜையை தினமும் பாராயணம் செய்து வழிபட்டு வந்தனர். 48வது நிறைவு நாளையொட்டி நாகேஸ்வரசிவம், தட்சிணாமூர்த்தி சிவம், சுரேஷ் சிவம் குருக்கள் அனுக்ஞை கலஸ்தாபனம், தீபாராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சதருத்ர ஜபம், கஜபூஜை, அஸ்வ, கோ பூஜை, வேஸாரதாரா ஹோமம், மகாபூரணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யானைகளில், காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து ஊற்றினர். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கபட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து ஊர்வலமாக வந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !