உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12 ராசி கற்களுடன் காசி விஸ்வநாதர் கோயில்!

12 ராசி கற்களுடன் காசி விஸ்வநாதர் கோயில்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கென ஏராளமான சிறப்புகள் உள்ளன. சர்வதேசப்புகழ் வாய்ந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வண்ண ரங்கோலிகளாலான மூன்றாம் பிரகாரம், 1893ல் சிகாகோ மாநாடு முடித்து இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் கால் பதித்த பாம்பன் குந்துகால், நுõற்றாண்டு பெருமையுடைய பாம்பன் ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகள் இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த பூமியான ராமேஸ்வரம், மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. மாவட்டத்தில் எண்ணற்ற ஊரணிகள் உள்ளன. இதில் 300 ஆண்டு பழமை வாய்ந்த முகவை ஊரணியை பராமரிக்க தவறியதால் அதனுள் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் புதைந்தது. இக்கோயில் கடந்த 2004ல் மீட்கப்பட்டது. 16 துõண்களை உடைய இக்கோயிலின் மேற்புறத்தில் 12 ராசிகளுடன் கூடிய கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீராம நாம உழவாரப்பணி குழு உறுப்பினர் சிவசங்கரன் கூறுகையில், 350 ஆண்டுகளுக்கு மன்னர் கிழவன் சேதுபதி காலத்தில் முகவை ஊரணியில் எடுக்கப்பட்ட மண்ணில் தயாரான கற்களால் அரண்மனை கோட்டை சுவர் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது. முகவை கரையில் புதைந்த காசி விஸ்வநாதர் கோயிலை தலைவர் சந்தான வேலு தலைமையில் உழவாரப் பணி செய்து மீட்டோம். இதன் மேற்புறத்தில் 12 ராசிகளுடன் கூடிய கருங்கல் உள்ளதால் இங்கு சுவாமி வீதியுலா நடந்துள்ளது என்பதற்கு தக்க சான்றாகும். இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த அருள்வாக்கிற்கு காத்திருக்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !