உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!

திருநெல்வேலி: சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண விழா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலின் முக்கிய விழாவான, 12 நாட்கள் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை, 5:30 மணிக்கு நடந்தது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் பிரகாரம் வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், மூன்று நாட்கள் அம்மன் சன்னிதி ஊஞ்சல் மண்டபத்தில், சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !