திருவாரூர் தியாகராஜர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
பிரசித்தி பெற்ற, திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு, தமிழக அரசின் சார்பில், 3.18 கோடி ரூபாய்; பக்தர்கள் சார்பில், 2 கோடி ரூபாய், திருப்பணிக்காக வழங்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கமலாம்பாள் சன்னிதி எதிரில், பிரம்மாண்ட யாகசாலையில், 125 குண்டங்கள் அமைக்கப்பட்டு, இருந்தன. நேற்று அதிகாலை, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 80 உப சன்னிதிகளில் உள்ள, 198 கும்பங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின், காலை, 9:30 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள் உட்பட ஐந்து சன்னிதிகள் மற்றும் ஒன்பது கோபுரங்களின் கலசங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் காமராஜ், அறநிலையத் துறை ஆணையர் வீர சண்முகமணி, உட்பட பலர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொட்டும் மழையில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.