நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்
நாமக்கல்: குளிர்காலம் துவங்கியதை தொடர்ந்து, ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், விஷேச நாட்களில், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அப்போது, உள்ளூர், வெளிமாவட்டம், மாநிலம், வெளிநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமியை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், ஆண்டு தோறும், குளிர்காலத்தில், ஸ்வாமிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு இந்த அபிஷேகம் செய்யப்படும். அவற்றை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏரளாமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டுச்செல்வர். அதன்படி, நடப்பு ஆண்டு குளிர்காலம் துவங்கியதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு, 120 கிலோ எடையில் வெண்ணெய்ர காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அவற்றை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.