லோக சாய்ராம் தியான பீட ஆண்டு விழா
ADDED :3655 days ago
மேடவாக்கம்: பெரும்பாக்கத்தில் நடந்த, லோக சாய்ராம் தியான பீட ஆண்டு விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.பெரும்பாக்கம், சவுமியா நகர் லோக சாய்ராம் தியான பீடத்தின், 16வது ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை, கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி, அருள்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, சிறப்பு தீப அலங்கார பூஜை, மாலை ஆர்த்தி, மங்கள ஆர்த்தி நடைபெற்றது. மாலையில், ஷோபா உஷா மற்றும் ஆஷா சகோதரிகளின், சாய் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றன. விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கனகவல்லி சண்முகம் அறக்கட்டளை நிர்வாகிகள், விழாவை முன்னின்று நடத்தினர்.