மானூர் சுவாமிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3655 days ago
பழநி : பழநி கோதைமங்கலம் மானூர் சுவாமிகள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. நவ..6 முதல் நவ.,8 வரை திருவிளக்கு வழிபாடு, கணபதிபூஜை, சிறப்பு யாகசாலையில் நான்குகால வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு புனித நீர் நிரம்பிய கும்பகலசங்கள் யாகசாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு காலை 8.40 மணிக்கு கோபுரக்கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டும், அதன்பின் மூலமூர்த்தி குருநாதர் மானூர் சுவாமிகள் திருப்பீட திருவடிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தீயணைப்புதுறை ""ஸ்பிரே மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். அன்னதானம் வழங்கப் பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் நவ.,11ல் மகா குருபூஜை விழா நடைபெற உள்ளது.