உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச வை - பை சேவை!

திருப்பதி ரயில் நிலையத்தில் இலவச வை - பை சேவை!

திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில், இலவச, வை - பை சேவையை துவக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது, என, ஆந்திர மாநிலம், ரயில்வே துறையின் குண்டக்கல் பிரிவு கூடுதல் மண்டல மேலாளர் சத்திய நாராயணா தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: தினமும், லட்சக்கணக்கில் பக்தர்கள் வரும், திருப்பதி ரயில்
நிலையத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதற்காக, ரயில் நிலைய விரிவாக்க பணி நடந்து வருகிறது. திருப்பதி மட்டும் அல்லாமல்,
சந்திரகிரி, ஸ்ரீனிவாசமங்காபுரம் ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படும். ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். திருப்பதி ரயில் நிலையத்தில், இலவச குடிநீருடன், இலசவ, வை - பை சேவையையும் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !