வால்பாறை கோவிலில் பிரதோஷ பூஜை!
ADDED :3656 days ago
வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசாமி கோவிலில் நடந்த, பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இங்கு பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் மாலை 5:30 மணிக்கு, சிவலிங்கத்திற்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன.
பின்னர் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.