உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை!
ADDED :3657 days ago
உடுமலை: தீபாவளியையொட்டி உடுமலை மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோவிலில், காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடந்தது. உற்சவர் மலர் அலங்காரத்திலும், மூலவர் தங்க காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பண்டிகைக்காலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.