திருப்பரங்குன்றத்து கோயிலில் நவ.,17ல் இரு திருவிழா!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.,17ல்
சூரசம்ஹாரமும், கொடியேற்றமும் நடக்கிறது.நாளை(நவ.,12) துவங்கும் கந்த சஷ்டி
திருவிழாவில் பக்தர்கள் காப்பு கட்டி கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்கின்றனர்.
தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில், திருவாட்சி
மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பார். நவ.,16 மாலை வேல்வாங்கும்
நிகழ்ச்சியும், நவ.,17ல் சூரசம்ஹாரம் லீலையும் நடக்கிறது.அன்று காலை 8.30 மணிக்கு
கார்த்திகை மகா தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றமும் நடக்கிறது. அன்று சூரசம்ஹாரம்
முடிந்து, சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதைதொடர்ந்து கார்த்திகை
திருவிழாவிற்காக, இரவு 8 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும்
நடக்கிறது. நவ.,18ல் தேரோட்டமும், மாலையில் மூலவர்களுக்கு தைல புண்ணியாகவாசனமாகி பாவாடை நைவேதன தரிசனமும் முடிந்து, கார்த்திகை திருவிழாவிற்கான சுவாமி புறப்பாடும் நடக்கிறது.