திருமுருகநாத சுவாமி கோவிவில் கந்த சஷ்டி விழா!
ADDED :3661 days ago
திருமுருகன்பூண்டி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிவில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. ஸ்ரீசண்முக நாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா தனை நடைபெற்றது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சாந்தி ஹோமத்துக்குபின், பக்தர்களுக்கு சஷ்டி காப்பு அணிவிக்கப்பட்டது. கோவில் முத்து சிவாச்சார்யார் கூறுகையில்,“17ல், சூரசம்ஹாரம்; 18ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கந்த சஷ்டியில் விரதம் இருந்தால், எண்ணிய காரியம் கைகூடும்,” என்றார். அவிநாசி, பூண்டி வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று காப்பு அணிந்து விரதத்தை துவக்கினர்.