உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா!

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டி விழா!

அலகுமலை: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில், நேற்று துங்கியது. காலை, 7:30க்கு கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம் மற்றும் சுவாமி வேலுக்கு அபிஷேகம், கோமாதா பூஜை நடந்தன. கோவை பாலரிஷி பீடம், ஸ்வசிராசினி சுவாமிகள், கந்த சஷ்டி விரதம் துவக்கும் பக்தர்களுக்கு, காப்பு கட்டினார். தினமும் கந்த சஷ்டி கவச பாராயணம், கந்த குரு கவசம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும், 17ல், மாலை, 5:00க்கு சூரசம்ஹாரம்; 18ல், மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் பக்தர் பேரவை மற்றும்  கந்த சஷ்டி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

கொங்கணகிரி கோவில்: கொங்கணகிரி வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீகந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 8:00 மணிக்கு கணபதி, சுப்ரமணியர் ஹோமம்; 9:30 மணிக்கு, கொடியேற்றம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. வரும், 17 வரை, தினமும் காலை, 9:30க்கு, திருசதை பாராயணம், கந்த சஷ்டி பாராயணம் நடக்கிறது. 17ம் தேதி, மாலை, 4:30க்கு, கந்த பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை; மாலை, 5:30க்கு, சூரசம்ஹார விழா நடக்கிறது. 18ம் தேதி காலை, 9:30க்கு, திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !