மாரியம்மன் கோவிலில் சுப்ரமணியர் சிலை கரிக்கோலம்!
ADDED :3660 days ago
புதுச்சேரி: அரியாங்குப்பம் மாரியம்மன் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சிலை கரிக்கோலம் நேற்று நடந்தது. அரியா ங்குப்பம் மாரியம்மன் கோவிலில் மகா கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, 2 அடி உயரத்தில் ஜம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சிலை கரிக்கோலம் நடந்தது. இன்று (14ம் தேதி) முதல் 16ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது. 17ம் தேதி கந்தசஷ்டி சிறப்பு பூஜை, 18ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.