உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா!

விழுப்புரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா!

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில்  உள்ள பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டியை யொட்டி, மூலவருக்கு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து  காலை 8:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சகஸ்ரநாமம், 6:30 மணிக்கு  ராஜஅலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:30 மணிக்கு தீபாராதனை, 7:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் மன்மத ஆண்டு கந்த சஷ்டிப் பெருவிழா துவங்கியது. விழாவையொட்டி நேற்று  முன்தினம் காலை 10:00  மணியளவில் ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து வீரவாகு தேவர்கள் காப்பு  அணியும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாரதனையும் நடந்தது. தமிழ் தேவார வழிபாட்டு சபையினரின் தேவார திருவாசகப் பாடல்ககளுடன், உற்சவ மூ ர்த்தியின் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரவிச்சந்திரன், உபய தாரர் ஆறுமுகம், தருமலிங்கம், பழனியாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !