உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீபத்திருநாளுக்காக பல வண்ண ரெடிமேட் விளக்கு

கார்த்திகை தீபத்திருநாளுக்காக பல வண்ண ரெடிமேட் விளக்கு

மானாமதுரை: மானாமதுரையில் கார்த்திகை தீபத்திருநாளுக்காக பல வண்ணங்களில் ரெடிமேட் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.வரும் 25ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவர். மண் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரி வைத்து விளக்குகளை ஏற்றி வழிபடுவர். சிலர் ரெடிமேட் விளக்குகளையும் ஏற்றுவர்.ரெடிமேட் விளக்குகள் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் தயாரிக்கப்படுகிறது. 5 கிராம்,15 கிராம்,25 கிராம் எடையுள்ள சின்ன சின்ன விளக்குகள் பச்சை, மஞ்சள்,ஊதா,சிவப்பு போன்ற பல்வேறு வர்ணங்களில் தயாரித்து பாக்கெட்களில் விற்பனை செய்கின்றனர்.

சின்ன சின்ன விளக்குகள் தவிர குபேர விளக்கு, லட்சுமி விளக்கு,மயில் விளக்கு,சங்கு விளக்கு,பிள்ளையார் விளக்கு,மாட விளக்கு என பல டிசைன்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.10 விளக்குகள் கொண்ட பாக்கெட் 10 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. குபேர விளக்கு போன்ற பேன்சி ரக விளக்குகள் ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்குகின்றனர்.

தயாரிப்பாளர் முத்துமணி கூறுகையில்: ரெடிமேட் கார்த்திகை விளக்குகளை ஆகஸ்ட் முதல் தயாரிக்க தொடங்குவோம். பெரும்பாலும் மதுரை மார்க்கெட்டை வைத்தே விளக்குகள் தயாரிப்போம். வட மாநிலத்தவர்கள் இவ்வகை விளக்குகளை விரும்பி வாங்குவர். நான் சிறுவயதில் இருந்தே தினமலர் வாசகர். எங்கள் வீட்டில் தினமும் தினமலர் நாளிதழ் வாங்குவார்கள். திருமணம் முடிந்து இடைக்காட்டூர் வந்த பின் இங்கும் எனது கணவர் தினமலர் வாங்குகிறார்.ரெடிமேட் விளக்குகள் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கும் போது தினமலர் என்ற பெயரில் விளக்குகளை தயாரித்து படம் எடுத்த பின் தான் பேக்கிங் செய்வோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !