உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் நவ. 17 ல் சூரசம்ஹாரம்: 18 ல் முருகன் திருக்கல்யாணம்!

பரமக்குடியில் நவ. 17 ல் சூரசம்ஹாரம்: 18 ல் முருகன் திருக்கல்யாணம்!

பரமக்குடி:  பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நவ. 17 ல் சூரசம்ஹாரமும், மறுநாள் முருகன் திருக்கல்யாணமும் நடக்கவுள்ளது.  பரமக்குடி பாரதிநகரில் உள்ள செல்வகுமரன் கோயிலில் 30 ம் ஆண்டு கந்தசஷ்டி விழா நவ. 12 ல் இரவு 7 மணிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் முருகன் தர்பார், வேடன், விருத்தன், அம்பாளிடம் வேல் வாங்கும் திருக்கோலத்தில் அருள்பாலிப்பார். நவ. 17 ல் காலை 9 மணிக்கு அபிஷேகம் நடந்து, மதியம் 3 மணிக்கு சண்முகர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வருவார். மாலை 5.30 மணிக்கு கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் மாலை 6 மணிக்கு முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும், இரவு பள்ளியறை பூஜையும் நடைபெறும்.  இதே போல் தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட அனைத்து முருகன் கோயிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் சிறப்பாக நடைöறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !