ரிஷிவந்தியம் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!
ADDED :3615 days ago
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நவ வீரர்கள் காப்பு கட்டுதலும், பூஜைகளும் நடந்தது. பின்னர் சாமி சன்னதி எதிரில் கொடியேற்றி, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இரவு சர்வ அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது. விழாவின் நிறைவாக வரும் 17ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. கோவில் குருக்கள், நாகராஜ், சோமு பூஜைகளை செய்தனர்.