மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.42.66 லட்சம் காணிக்கை
ADDED :3614 days ago
பொள்ளாச்சி: ஆனைமலை, மாசாணியம்மன் கோவிலில், உண்டியல் மூலம் 42.66 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆனைமலையில் புகழ் பெற்ற மாசாணியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இதில், 150 தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். முன்னதாக ஒன்பது தட்டுக்காணிக்கை உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதன்மூலம், 12 லட்சத்து 12 ஆயிரத்து 925 ரூபாய் இருந்தது. நிரந்தர உண்டியல்கள், 16ல் இருந்து 30 லட்சத்து 53 ஆயிரத்து 401 ரூபாய் இருந்தது. இதன்படி இரண்டு உண்டியல்களிலும் சேர்த்து, 42 லட்சத்து 66 ஆயிரத்து 926 ரூபாய் கோவில் வருமானமாக கணக்கிடப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் ஆனந்த், ஆய்வாளர் புவனேஸ்வரி, புலவர் ஆதீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.