கூனிச்சம்பட்டு கோவிலில் பிரதிஷ்டை மகா உற்சவம்
ADDED :3613 days ago
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு தேவநாத சுவாமி கோவிலில் பிரதிஷ்டை மகா உற்சவம் நாளை துவங்குகிறது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிரதிஷ்டை மகா உற்சவம் நாளை 15ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், ஆசார்ய வர்ணம், பாலிகை ஸ்தாபனம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. 16ம் தேதி காலை 7:00 மணிக்கு கும்ப பிம்ப மண்டல ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, ௯.30 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி காலை 8:00 மணிக்கு விஸ்வருப சேவை, சுவாமி வீதியுலா நடக்கிறது.