உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., கோயில்களில் கந்த சஷ்டி விழா

ஸ்ரீவி., கோயில்களில் கந்த சஷ்டி விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி முருகன்கோயில்களில் கந்தசஷ்டி விழா சிறப்புடன் நடந்து வருகிறது. மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை 6.30 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் ரகு பட்டர் தலைமையில்நடந்தது. இரவு 7.30 மணிக்குமேல் மயில் வாகனத்தில் முருகன்,வள்ளி, தெய்வானை வீதியுலா எழுந்தருளினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி செய்தனர்.

* பழனியாண்டவர் கோயிலில் மாலை 7 மணிக்கு முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
*மம்சாபுரம் சிவசுப்பிரமணியர் தி கோயிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. சிவசுப்பிரமணியர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் மாலை 6 மணிக்குமேல் சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !