திருவண்ணாமலை தீப விழா உற்சவத்துடன் தொடக்கம்
ADDED :3661 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி, நகர காவல் எல்லை தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நேற்று இரவு நடந்தது. இதை முன்னிட்டு, துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து காமதேனு வாகனத்தில் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில், கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துர்க்கையம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று பிடாரியம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவம் நடைபெறுகிறது, வரும், 16ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி வரும், 25ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.