கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3661 days ago
கீழக்கரை: கீழக்கரை மறவர் தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பெண்கள் சக்தி ஸ்தோத்திரம் பாடி நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையை சிவஸ்ரீ காசிநாத குருக்கள் செய்திருந்தார்.