உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்துார்: திருச்செந்துார் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின், 4ம் நாளான நேற்று, தங்க ரதத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். மாலை, 4:00 மணிக்கு, கடற்கரை மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். 4:30 மணிக்கு கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் முன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 18ம் தேதி மாலை, 5:30 மணிக்கு முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.பழநியிலும், நாளை மாலை, 6:00 மணிக்கு மேல், முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !