உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா

மாதேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா

மேட்டுப்பாளையம்: சத்தியமூர்த்திநகர் மாதேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, வரும், 23ம் தேதி முதல் சோமவார பூஜை துவங்குகிறது. அடுத்து, 30ம் தேதி இரண்டாவது சோமவார பூஜையும், டிச., 7ல் மூன்றாவது சோமவார பூஜையும், 14ம் தேதி நான்காவது சோமவார பூஜையும் நடைபெற உள்ளது. சோமவார பூஜை நாட்களில் மாலை, 6:00 மணிக்கு சிவசகஸ்ரநாம பாராயணம் நடக்க உள்ளது. வரும், 25ம் தேதி திருக்கார்த்திகை தீப விழா நடைபெற உள்ளது. காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு பாலாபிஷேகமும், 11:00 மணிக்கு பாலமுருகர் மற்றும் ஜெயவிஜய சிவ சண்முகருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !