மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3613 days ago
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மூன்றாவது வார்டு, வீரபண்ணாடி புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷகம், வரும், 22ம் தேதி காலை, 7.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, 21ம் தேதி காலை ஏழு மணிக்கு புண்ணிய நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், மதியம் இரண்டு மணிக்கு திரு விளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வேள்வி, மண் எடுத்தல், முளைப்பாலிகையிடல், காப்பு அணிவித்தல் நடக்கிறது. மாலை ஏழு மணிக்கு முதல் கால யாக பூஜையுடன் துவங்குகிறது. வரும், 22ம் தேதி காலை ஐந்து மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 6.30 மணிக்கு நாடி சந்தானம், 7.30 மணிக்கு கோபுர கும்பாபி?ஷகம் நடக்கிறது. இரவு, 10 மணிக்கு எண் வகை மருந்து சாற்றி கருவறையில் நிலைப்படுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.